எனக்கும் பாருவுக்கும் சுத்தமா செட்டே ஆகாது! ஜாலியாக கலாய்த்த விஜய் சேதுபதி
விஜே பார்வதி பிக்பாஸ் நிகழ்சிக்கு பின்னர், விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடர் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி பாரு குறித்து மேடையில் பேசிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் பார்வதி
பிக்பாஸ் சீசன் 9 இல் ரெட் கார்டுடன் வெளியேறிய vj பார்வதி மற்றும் கம்ருதீன் பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.
பிக் பாஸ் சீசன் 9 டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கின் போது, பார்வதி மற்றும் கமருதீன் இருவரும் சாண்ட்ராவை மிகவும் மோசமான வார்தைகளால் விமர்சித்தார்கள்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வார்த்தை முற்றியது. இதனால் கோவத்தின் உச்சத்திற்கு சென்ற பார்வதி, காரை திறந்து சாண்ட்ராவை வெளியில் தள்ளினார்.
இதற்கு, கம்ருதீனும் துணையாக இருந்தால் ,ஒட்டுமொத்த ரசிகர்களும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கூறினார்கள்.

இதை தொடர்ந்து பார்வதிக்கும் கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் வரலாற்றில் இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது இந்த சீசனில் தான்.
பிக்பாஸ் இந்நிகழ்ச்சிக்கு பிறகும் பார்வதி மற்றும் கம்ருதீன் நிகழ்ச்சியில் இருந்தது போல ஒன்றாக சுற்றி வருகிறார்கள்.நிகழ்ச்சிகள் செல்வது, புகைப்படங்கள் எடுப்பது என இப்போது நன்றாக பழகி வருகிறார்கள்.

புதிய வெப் தொடர்
தற்போது விஜே பார்வதி பிக்பாஸ் பிறகு நடித்துள்ள ஒரு வெப் தொடர் குறித்த தகவல் வந்துள்ளது.
விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜே பார்வதி நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வெப் தொடர் நாளை 27 ஆம் திகதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளதாம். இந்நிலையில், இந்த வெப் தொடர் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி பாரு குறித்து மேடையில் பேசிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |