இரண்டாவது திருமணத்தில் நம்பிக்கை இல்லை: பிக்பாஸ் மகேஸ்வரி!
தனது இரண்டாவது திருமணம் குறித்து தனக்கு நம்பிக்கை இல்லை என பிக்பாஸ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
தொகுப்பாளினியாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் வி.ஜே மகேஸ்வரி, இசையருவி, சன் டிவி, சன் மியூசிக் ஆகிய சேனல்களில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மனைவிகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.
பிக்பாஸ் பயணம்
பிக்பாஸ் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜே மகேஸ்வரி கலந்து கொண்டார்.
அவர் உள்ளே சென்று சில சர்சைகளிலும் சிக்கினார். பின்னர் நன்றாகவே விளையாடினாலும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார்.
திருமண வாழ்க்கை
மகேஸ்வரி தனது வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்தாக நேயர்களிடம் நிகழ்ச்சியொன்றில் பகிர்ந்து கொண்டார். இதில் தான் 15 வயதில் இருந்து பயணத்தை தொடங்கியதாக கூறியிருந்தார்.
மேலும் தான் பெரிய கனவுகளோடு திருமண வாழ்க்கையைத் தொடங்கியதாகவும் அக்கனவு ஒரு வருடத்திற்குள் களைந்துவிட்டதாகவும் சொல்லியிருந்தார்.
மகன்தான் எல்லாமே.. திருமணத்தில் எனக்கு கிடைத்த பெரிய பரிசு என் மகன்.
எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை நான் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். நான் தனியொரு பெண்ணாக என் மகனை வளர்த்து வளர்க்கிறேன்.
தனியொரு பெண்ணாக ஒரு குழந்தையை வளர்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் நான் என் வாழ்க்கையில் சாதித்துக் கொள்ள ஒரு வழி இருக்கும்.
கஷ்டமாக இருந்தாலும் சுதந்திரமாக செயற்பட முடியும். உலகம் மிகவும் பெரிது. எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இராண்டாவது திருமணம்
இரண்டாவது திருமணம் பண்ணிக்கொள்ளக் கூடாது என்று ஒன்றுமில்லை. இது நாள் வரை நான் அதற்கு முயற்சிக்க வில்லை. தேடிப்போனதும் இல்லை. எனக்கு நம்பிக்கையும் இல்லை.
இப்போது இருக்கும் வாழ்க்கை எனக்கு நல்லதாகவே இருக்கிறது. மேலும் எனது அக்கா, அம்மா எனக்கு எந்நேரமும் உதவிக்கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.