திடீரென கமலை நேரில் சந்திக்க இது தான் காரணமாம்! டுவிட்டர் பதிவில் பேசியதை லீக் செய்த விக்ரமன்
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இருந்து விக்ரமன் திடிரென நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்ற நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 6 முதல் இடத்தை பிடிக்கிறது. பிக் பாஸ் சீசன் 5 சுமார் 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட நிலையில், சீசன் 6 சுமார் 21 போட்டியாளர்கள் பங்கேற்று போட்டியை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்த போட்டியில் முக்கிய போட்டியாளராக அசீம், விக்ரமன், ஜிபி முத்து, சிவின், ஆயிஸா, மைனா, ரக்ஸிதா என பல பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் சண்டைகளும் வாக்குவாதங்களும் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
இதனால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு இவர் தான் டைட்டில் வின்னராக வருவார் என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. மேலும் அசீம் இந்த சீசனில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்து சுமார் 100 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் சீசன் 6 நகர்த்திச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்த சில பிரபலங்கள் தங்களில் சுயமரியாதை வெளியிலிருக்கும் ரசிகர்கள் மத்தியில் பலாகி விடக் கூடாது என்பதில் மிக கவனமாக விளையாடினார்கள்.
இதனை கண்டுபிடித்த பிக்பாஸ் தொகுப்பாளர் கமல் பல முறை சுட்டிக் காட்டியும் அவர்கள் மாறுவது போன்று தெரியவில்லை என்பதால் குறைவான வாக்குகள் என்ற அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்கள்.
கமலை நேரில் சென்று சந்தித்த முக்கிய போட்டியாளர்
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னர் டாஸ்க்கில் கடைசி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்த விக்ரமன் ஒரு அரசியல்வாதி என்பதால் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
மேலும் நடிகர் கமல் அவர்களை அசீமை டைட்டில் வின்னர் எனக்கூறி விட்டு விக்ரமன் பக்கம் சாய்ந்து நின்றது விக்ரமன் வெளியில் வந்தவுடன் சமாளிப்பதற்கு ஒரு சிறப்பு ஆதாரமாக போய்விட்டது. இதனை பல பேட்டிகளில் கூறியும், அசீம் வெற்றிப் பெறுவதற்கு அவரின் ரசிகர்கள் தான் காரணம் கடைசியில் “அறம் தான் வெல்லும்” எனவும் கூறி வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 6 முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில் விக்ரமன் திடீரென கமலை தனிமையில் சந்திக்க அவரின் வீட்டிற்கே சென்றுள்ளார்.
இந்த செய்தியை சமூக வலைத்தளப்பக்கங்களில் விக்ரமன் அவர்கள், “மதிப்புக்குரிய அண்ணன் திரு கமல்ஹாசன் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன்” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
மேலும் இவர்கள் இருவரும் கமல்ஹாசன் வீட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “விக்ரமன் தன்னுடை அரசியல் வாழ்க்கை பற்றி பேசுவதற்காக தான் கமல் வீட்டிற்கு சென்றிருப்பார்” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இன்று மதிப்பிற்குரிய அண்ணன் திரு @ikamalhaasan அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன். pic.twitter.com/3XUFdF0Gic
— Vikraman R (@RVikraman) February 7, 2023