தமிழ் எங்கே? யார் குற்றம்? பிக்பாஸ் விக்ரமனின் டுவிட்
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்த பிக்பாஸ் விக்ரமன் இந்திய அரசாங்கம் குறித்து போடப்பட்ட டுவிட் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் விக்ரமன்
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்து பல கோடி ரசிகரகளுக்கு சொந்தமானவர் விக்ரமன்.
இவர் பிக் பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னர் கடைசி மேடை வரைக்கும் சென்று இரண்டாம் இடம் பெற்றவர். பிக் பாஸ் வீட்டில் சென்ற பின்னர் தான் ஒரு அரசியல்வாதி என்பதை மறந்து, சக போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வந்தார்.
இவருக்கு பிக் பாஸ் வீட்டிலுள்ள பாதி போட்டியாளர்கள் விக்ரமனுக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆன போதிலும் மக்கள் மத்தியில் அசீம் தான் டாப் போட்டியாளராகவே இருந்து வந்தார்.
மக்களின் வாக்குகள் அடிப்படையில் அசீம் தான் டைட்டில் வின்னர் பட்டத்தை, காசோலை, கார் என பல பரிசுகள் பெற்றார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் நாட்டில் நடக்கும் அநீதிக்காக குரல் கொடுத்து வருகிறார்.
புதிய சர்ச்சையை கிளப்பும் விக்ரமன்
இதன்படி, விருது நகரில் நடக்கும் தமிழ்நாடு “துப்புரவு பணியாளர்கள் சங்க மாநாட்டில்” கலந்துக் கொள்வதற்காக விக்ரமன், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மாத்திரம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த விக்ரமன் இந்த விடயத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “ சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் விமானத்தில் கூட இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள். பலமுறை கேள்வி எழுப்பியும் தமிழில் ஒலிப்பதில்லையே ஏன்? யார் குற்றம்? ” என டுவிட் செய்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள், “தமிழின் பற்றை எங்கு சென்று பார்த்துள்ளார் விக்ரமன், வாழ்த்துக்கள்”என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.
சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் விமானத்தில் கூட இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள். பல முறை இது தொடர்பாக கேள்வி எழுப்பியும் தமிழ் ஒலிப்பதில்லையே ஏன்? யார் குற்றம்?@aaichnairport @AAI_Official @JM_Scindia @IndiGo6E
— Vikraman R (@RVikraman) February 25, 2023