Redcard கொடுங்க.. மூர்க்கத்தனமாக விளையாடும் விஜயை விளாசும் நெட்டிசன்கள்
“இந்த பைத்தியத்துக்கு Redcard கொடுங்க” என இணையவாசிகள் விஜயிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
Redcard கொடுங்க..
இப்படியொரு நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுத்த டாஸ்க் பாதியில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்க்கை நிறைவு செய்வதற்காக பிக்பாஸ் வீட்டிலுள்ள பொருட்களை உடைத்ததுடன் மற்ற போட்டியாளர்களை தாக்கியுள்ளனர்.
இதனால் பிரதீப், விஜய், விஸ்ணு ஆகிய போட்டியாளர்கள் மத்தியில் பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் Yellow card வாங்கிய விஜய் இந்த வாரமும் வாங்குவார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் விஜய் இப்படி மூர்க்கத்தனமாக நடந்து கொள்வது பெண் போட்டியாளர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
Ennada wwe aaditu irukinga ?♂️#VijayVarma smash #PradeepAntony#BiggBossTamil7 #BiggBossTamil#biggbosstamil7 #biggbosstamilpic.twitter.com/1MqUj2WElY
— Sekar ? (@itzSekar) October 19, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |