Bigg Boss: கதவை திறந்துவிட சொல்றேன் வெளியே வாங்க... Goa Gang-ஐ வறுத்தெடுத்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் Goa Gang-ஐ நடிகர் விஜய் சேதுபதி பயங்கரமாக வறுத்தெடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகியுள்ளது. விஜய் சேதுபதி நடத்தும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை பரபரப்பிற்கு பஞ்சம் வராமல் இருக்கின்றது.
கடந்த வாரத்தில் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் வெளியேறியுள்ளார். இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்றைய ப்ரொமோ காட்சியில் விஜய் சேதுபதி பயங்கரமாக வறுத்தெடுத்துள்ளார். அதாவது கடந்த தினங்களில் நடந்த பேய், ஏஞ்சல் டாஸ்கில் கூட்டணி சேர்ந்து விளையாடியுள்ளனர்.
Goa Gang என்ற பெயரில் சேர்ந்த இந்த கூட்டணியினை விஜய் சேதுபதி கோபத்தில் வறுத்தெடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசனைப் போன்று இல்லாமல் அவரவர் செய்த தவறுகளை பட்டென முகத்திற்கு நேராக பேசி பதிலடி கொடுத்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |