Bigg Boss: விஜய் சேதுபதியையே ஏமாற்றிய ஜாக்குலின், சௌந்தர்யா... பொங்கி எழுந்த தருணம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் விஜய் சேதுபதி ஜாக்குலின், சௌந்தர்யாவால் ஏமாந்ததைக் கூறியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகியுள்ளது. விஜய் சேதுபதி நடத்தும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை பரபரப்பிற்கு பஞ்சம் வராமல் இருக்கின்றது.
கடந்த வாரத்தில் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் வெளியேறியுள்ளார். இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்றைய ப்ரொமோ காட்சியில் விஜய் சேதுபதி பயங்கரமாக பொங்கி எழுந்துள்ளார். அதாவது பேய் டாஸ்கில் தானே எதிர்பார்த்தது நடக்கவில்லை என்று கொந்தளித்துள்ளார்.
ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவின் விளையாட்டு மற்றும் நடிப்பு இவற்றினை அவதானித்த விஜய் சேதுபதி தாறுமாறாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |