விசித்ராவின் திரை வாழ்க்கைக்கு பிரச்சினை சத்யராஜா? விச்சு போட்ட பழைய பதிவு வைரல்
நடிகர் விசித்ராவின் சினிமா வாழ்க்கை சத்யராஜ் மூலமாகத் தான் முற்றுப்புள்ளி வைத்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், விசித்ராவின் பழைய பதிவு வைரலாகி வருகின்றது.
நடிகை விசித்ரா
தமிழ் சினிமாவில் கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் விசித்ரா. பொற்கொடி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நிலையில், பல படங்களில் நடித்திருந்தார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி பல சீரியல்களிலும் நடித்த இவர் பின்பு நடிக்காமல் இருந்தார். திருமணமாகி குழந்தை பெற்ற பின்பு திரையுலகிற்கு மீண்டும் வந்த இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இறுதி வரை வந்த இவர் கடைசியில் டைட்டில் வாங்க முடியாமல் சென்றுள்ளார்.
சத்யராஜ் தான் காரணமா?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு, விசித்ரா பற்றிய பல தகவல்கள் அதிகம் பேசப்படும் நிலையில், சத்யராஜ் தான் விசித்ராவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்பட்டு வந்தது...
இதற்கு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரிப்ளை செய்த விசித்ரா, அந்த காலகட்டத்தில் தனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரம் மட்டுமே கிடைத்ததாகவும், அதனால் மற்ற வேடங்களில் தன்னால் நடிக்க முடியாமல் போனது.
சத்யராஜ் சார் என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான 'வில்லாதி வில்லன்' படத்தில் தனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தார் என கூறி பதிலடி கொடுத்திருந்தார்.
விசித்ராவின் இந்த பழைய பதிவு தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில், சத்யராஜை குற்றம் சாட்டியவருக்கு சரியான பதிலையும் அளித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |