பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் அடிக்கடி கீழே விழுவது குறித்து வனிதா கூறிய காரணம்: கலாய்க்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் ஜோவிகா அடிக்கடி கீழே விழுவது குறித்து அவரது தாயான வனிதா கூறிய காரணத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் வனிதாவின் மகளும் ஒருவர். வனிதாவிற்கு எந்த அளவிற்கு விமர்சனம் இருந்ததோ அதே அளவு ஜோவிகாவிற்கும் பல விமர்சனங்கள் குவிந்துகொண்டு தான் வருகிறது.
அந்த வகையில் ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார். நாட்கள் செல்ல செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்து இவர் சகா போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் நடத்தி வந்தார்.
மேலும் இதுவரை இவருக்கு ஆறு முறை கேப்டன் ஆகும் டாஸ்க்கில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் அனைத்து டாஸ்க்கிலும் இவர் தோற்றார்.
குறிப்பாக, இவர் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி வழுக்கி விழுந்து வருவதை பலரும் கேலி செய்து வருகின்றனர். அது குறித்து அவரது தயாரான வனிதா பேசியுள்ளார்.
வனிதா கூறிய காரணம்
இந்நிலையில் யூடுயூபில் பிக்பாஸ் review என்ற பெயரில் தனது மகளுக்காக மட்டும் முட்டு கொடுத்துவரும் வனிதா இதுகுறித்து பேசியுள்ளார்.
அப்போது '' ஜோவிகாவுக்கு அறிவே இல்லை என்றும், வீட்டில் இருந்து காருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, ஆலம்பாக்கத்தில் உள்ள என்னுடைய அப்பா வீட்டில் இருக்கும் போதும் சரி, எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பா. அவளுக்கு ஓடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.
அவள் ஒரு ரன்னர், இதனால் பலமுறை ஓடாதே கீழே விழுந்து விடுவாய் என சொல்லி பார்த்துவிட்டேன் அதை மட்டும் அவ செய்யவே மாட்டா. விழுந்து நல்ல அடிபடட்டும் அப்போதான் அவளுக்கு புத்தி வரும்'' என்று முட்டு கொடுத்து பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |