காபி சண்டைக்கு காரணம் இது தான்.. அர்ச்சனாவை கடுமையாக விமர்சிக்கும் வனிதா
பிக்பாஸ் அர்ச்சனாவை, வனிதா கடுமையாக விமர்சிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், விக்ரம், மாயா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் இதுவரையில் பவா,வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய திருப்பத்தை உருவாக்குவதற்காக 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்நுழைந்தார்கள்.
அதில் வந்தவர்கள் தான் நடிகை அர்ச்சனா. வந்த முதல் வாரம் அழுது புலம்பி கொண்டிருந்தாலும் இரண்டாம் வாரத்திலிருந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக நிக்ஷன் - அர்ச்சனா இருவருக்கும் சண்டை வெடித்தது.
கடுமையாக விமர்சிக்கும் வனிதா
மேலும் அர்ச்சனா அதிகமாக புகை பிடிக்கிறார் என்றும் இது தொடர்பில் கமலிடம் கூற போவதாகவும் விஷ்ணு கூறியிருக்கிறார். இதனால் அர்ச்சனாவின் ஆரோக்கியத்திற்கு குறைபாடு ஏற்படும் எனவும் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் விமர்சகர் வனிதா, அர்ச்சனா பற்றி கடுமையாக விமர்சித்து உள்ளார்.
அதாவது, “ அர்ச்சனாவிற்கு புகைபிடிப்பது, போதைப்பொருள் பயன்படுத்துவது ஆகிய பழக்கங்கள் இருக்கின்றது.
இதன் காரணமாக தான் அவர் காபி விடயத்தை அப்படி ரியாக்ஷன் கொடுக்கிறார். மேலும் எங்களுடைய சீசனிலும் இப்படியானவர்களை பார்த்திருகிறேன். அவருக்கான விடயங்கள் சரியாக கிடைக்காவிட்டால் இப்படி தான் நடந்து கொள்வார்.” என பேசியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள் வனிதா மீது கொதிப்புடன் இருந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |