சூடு பிடிக்கும் பிபி அல்டிமேட்! இந்த வார பலியாடு யார் தெரியுமா? டேஞ்சர் ஜோனில் முக்கிய போட்டியாளர்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற போகின்ற பலி ஆடு யார் என்பதை நெட்டிசன்கள் கணித்துள்ளனர்.
நாமினேஷனில் இடம்பெற்ற பாலா அதிக வாக்குகளுடன் இந்த நாமினேஷன் பட்டியலில் முதலில் சேவ் ஆகும் நபராக முதலிடத்தில் உள்ளார்.
பாலாவுக்கு அடுத்த இடத்தில் தாமரை உள்ளார்.
தாமரையை தொடர்ந்து நிரூப், ஜூலி, அனிதா சம்பத் உள்ளிட்ட போட்டியாளர்கள் சுமார் 10 சதவீத வாக்குகளுடன் சேஃப் ஜோனில் உள்ளனர்.
தொடர்ந்து சிறப்பான விளையாட்டையும் இவர்கள் ஆடி வருவதால் மக்கள் இவர்களுக்கு ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். அதனால், இந்த வாரம் இவர்களில் யாரும் வெளியேற வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
கடைசி மூன்று இடமான டேஞ்சர் ஜோனில் ஷாரிக், அபிநய் மற்றும் சினேகன் உள்ளனர்.
வழக்கம்போல் அபிநய் கடைசி இடத்திலேயே தொங்கிக் கொண்டு இருக்கிறார். ஆனால், இந்தமுறை அவருக்கு துணையாக ஷாரிக் மற்றும் சினேகன் கடைசி இடத்தில் இருப்பதால் இருவரில் யார் இந்த வாரம் பலி ஆடாக ஆகப் போகிறார்கள் என்பதைத் தான் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.