அவிழ்ந்த தாமரையின் ரகசியம்...பிரியங்காவுடன் மருத்துவமனைக்கு சொன்றாரா? அண்ணாச்சியால் ஏற்பட்ட விபரீதம்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்று சிகிச்சை பெற்றமை குறித்து பேசியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் நள்ளிரவு என்பதால் போட்டி நிறுத்தப்பட்டது.
எல்லோரும் உறங்குவதற்கு முன்னர் படுக்கை அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது பிக் பாஸ் சீசன் 5 இல் மருத்துவ சிகிச்சை பெற்றது குறித்து சக போட்டியாளர்களிடம் கூறினார்.
அதாவது, தாமரைக்கு தூக்கம் வரவில்லை என்பதால் இமான் அண்ணாச்சி பயன்படுத்தும் தூக்க மாத்திரையை கொடுத்துள்ளார்.
தூங்குவதற்கு முதல் முறை மாத்திரை பயன்படுத்தியதால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

வாந்தி, மயக்கம் என்று வந்தமையால் பிரியங்காவுடன் மெடிக்கல் அறைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
மெடிக்கல் அறைக்கு சென்ற விடயத்தினை தான் மருத்துவமனை என்று வாய்த்தவறி கூறி விட்டாராம். இதனை இன்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாவிடம் கூறி இனி தூங்குவதற்கு மாத்திரை பயன்படுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
