பிக்பாஸ் அல்டிமேட்: கண்ணீர் வி்ட்ட வனிதா: தாமரைக்கு கமல் கொடுத்த பரிசு! சினேகனை கண்ணீருடன் வழியனுப்பிய கன்னிகா
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நபராக வனிதா உள்ளே நுழைந்துள்ளார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வீட்டினை சுற்றி காண்பிக்க கமல் வீட்டிற்குள் செல்லாமல், ட்ரோன் கமெரா மூலம் வீட்டை காண்பித்துள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று துவங்கப்பட்டது. இதன் துவக்க விழா ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதில் ஃபீனிக்ஸ் பறவையில் சிறகுகள் விரித்த மேடையின் மத்தியில் இருந்து கமல் வருவதாக மிக பிரம்மாண்டமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே கமல் வந்ததும் எதற்காக பிக்பாஸ் அல்டிமேட் உடனடியாக துவங்கப்பட்டது என விளக்கம் கொடுத்துள்ளார்.
பின்பு முதல் போட்டியாளராக வனிதா கமலிடம் தேன் போத்தலை பரிசாக அளித்துள்ளார். இரண்டாவதாக நிரூப் மிளகை பரிசாகவும், ஜுலி வெங்காயத்தினை பரிசாகவும், அபிராமி மஞ்சள் தூளை பரிசாகவும், தாமரைக்கு அரிசியும், தாடி பாலாஜிக்கு முருங்கைக்காயும், பாலாவிற்கு கீரையும், அனிதாவிற்கு பாலும், சுஜா வருணிக்கு பூண்டும், சுரேஷ் சக்கரவார்த்திக்கு உப்பும் கமல் பரிசாக கொடுத்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து ஷாரீக் கடுகும், அபிநய் நெய்யும், சுருதி சீரகமும், கடைசியாக சினேகன் தனது காதல் மனைவிக்கு ஒரு கவிதையை கூறவே, அவரது மனைவி கண்ணீர் மல்க சினேகனை பிரிவினை வெளிப்படுத்தியுள்ள நிலையில், வாழைக்காயை பரிசாக பெற்று மனைவியுடன் கமல்ஹாசனிடம் ஆசி பெற்று உள்ளே சென்றுள்ளார்.