பிக் பாஸில் இருந்து இரண்டு போட்டியாளர்களுடன் வெளியேறிய கமல்....சினேகன் தப்பினார்!
பிக் பாஸ் அல்டிமேட்டின் சன்டே ஸ்பெஷல் வீக்கெண்ட் இது என்றே கூறலாம்.
பிக் பாஸில் இருந்து இன்று ஷாரிக் மற்றும் அபி ஆகியோருடன் உலகநாயகனும் அதிரடியாக வெளியேறியுள்ளார்.
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என பிக் பாஸ் ஏற்கனவே பயமுறுத்தியிருந்தார்.

இந்த வாரத்துக்கான லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்காக வின்டேஜ் கல்லூரி டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதயம் முரளி கல்லூரியில் படிக்கும் 80களை சேர்ந்த மாணவர்கள் போல போட்டியாளர்கள் உடைகளை அணிந்து கொண்டு அசத்தினர்.
காதல், சர்ச்சை, சண்டை என ஏகப்பட்ட விஷயங்கள் இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சூடு பறந்தது.

ரூல்ஸ் பிரேக் பண்ணாலும், டபுள் மீனிங் டயலாக் பேசினாலும், பிக் பாஸ் கேம் என்றால் அதில் பாலா தான் கிங் என ரசிகர்கள் பாலாஜி முருகதாஸை கொண்டாடி வருகின்றனர்.
பாலா மற்றும் வனிதாவுக்கு இடையே வெடித்த சண்டைகள் தான் இந்த வாரத்தின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. தாமரையும் தன் பங்குக்கு ஸ்கோர் செய்ய பார்த்து வருகிறார்.
இந்த வார தொடக்கத்திலேயே இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பீதியை கிளப்பிய நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷாரிக் மற்றும் அபிநய் வெளியேறினார்கள்.

வழமையாக வெளியேற்றத்தினை அறிவித்த பிறகு போட்டியாளர் வெளியே சென்று விடுவார். முதலில் ஷாரிக் வெளியேறியதும் பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்தார்.
அடுத்ததாக அபி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். பின்னர் தன்னுடைய வெளியேற்றம் குறித்தும் உலகநாயகன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அல்ட்டி மேட்டில் இருந்து இன்று மூவர் வெளியேற்றப்பட்டனர். இதேவேளை, சினேகன் வெளியேற்றப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.