பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்! யாரும் எதிர்பாராத திருப்பம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இது கடைசி வாரம் என்பதால் வெளியே சென்ற போட்டியாளர்கள் மறுபடியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர்.
பின்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷ், ரம்யா இருவரும் உள்ளே சென்ற நிலையில் தற்போது ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி என ஆறு போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் வீ்ட்டிற்குள் இருக்கின்றனர்.
இந்த வாரம் கடைசிவாரம் என்பதால் பழைய போட்டியாளர்களும் உள்ளே வரவழைக்கப்பட்டு வித்தியாசமான டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு வருகின்றது.
சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள்! முகம் சுழிக்க வைக்கும் காட்சி
அதிரடியான வெளியேற்றம்
பயங்கர மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் அதிரடியான இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்படாத நிலையில், இந்த வாரத்தில் இடையே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆறு போட்டியாளர்களும் நெருப்பு மழையில் நனைந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து அபிராமி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த ப்ரொமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.