பிக்பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? வெளியே கசிந்த தகவல்
பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இறுதி கட்டத்தில் பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆரம்பத்தில் 7 வாரம் என்று கூறிய நிலையில் தற்போது 10 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது 9வது வாரத்தில் இருக்கும் இந்நிகழ்ச்சியில், பாலாஜி, நிரூப், தாமரைச் செல்வி, ஜூலி, ரம்யா பாண்டியன், அபிராமி ஆகியோர் உள்ளனர்.

அந்த ஆளைப் பற்றி பேசாதிங்க! ரொம்ப Worst: கமல் குறித்து மோசமாக பேசிய பாலாஜி மனைவி நித்யா
வெளியேறிய சுருதி
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுருதி பெரியசாமி ரூ.15 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த முறை பணத்தினை எடுத்துக்கொண்டு செல்வதற்கும் சில போட்டிகள் நடைபெற்றது.
ஜுலி, சுருதி இருவருக்கும் இடையே நடைபெற்ற இந்த போட்டியில் சுருதி வெற்றி பெற்று கடைசியாக 15 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

இந்த வாரம் வெளியேறுவது யார்?
பிக்பாஸ் அல்டிமேட்டில் 9வது வாரத்தில் வெளியேற போவது யார்? என்ற தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இதுவரை பதிவான வாக்குகள் அடிப்படையில் அபிராமி குறைவான வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளார். எனவே அவர் எவிக்ட் ஆக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரம், டபுள் எவிக்ஷன நடந்தால் அவருடன் சேர்த்து ரம்யா பாண்டியன் வெளியேற கூடும் என தகவல்கள் கசிந்து வருகின்றன. இதன் உண்மை நிலவரம் நாளை எபிசோடு மூலம் தான் நமக்கு தெரிய வரும்.
