அந்த ஆளைப் பற்றி பேசாதிங்க! ரொம்ப Worst: கமல் குறித்து மோசமாக பேசிய பாலாஜி மனைவி நித்யா
மகளை வைத்து பணம் சம்பாதிக்கும் மனைவி நித்யாவிடம் இருந்து குழந்தையை பெறுவதற்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார் தாடி பாலாஜி.
பிக்பாஸில் நித்யா
தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பிரிந்தனர். அதில் மகளை கொடுமைப்படுத்துவதாக நித்யா புகார் அளித்து அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் பிரிந்து வாழ்ந்த இவர்களை பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது சீசனில் உள்ளே போட்டியாளர்களாக களமிறக்கியது பிரபல ரிவி. நிகழ்ச்சி முடிவதற்கு கமல்ஹாசனும் இவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று கூறியிருந்தார்.

அல்டிமேட்டில் பாலாஜி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மீண்டும் கலந்து கொண்டு, நிகழ்ச்சியில் தன்னை அவதூறாக பேசிவரும் நிலையில், தனது மகள் மீது பாசம் இருப்பதாக கூறி நடிக்கும் பாலாஜியை உள்ளே சென்றால் நடக்கிறதே வேறு என்று மகளுடன் நேரலையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், தாடி பாலாஜி சமீபத்தில் தனது மகளை மனைவி நித்யா தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார் என்றும், 7வது படிக்கும் மகளை பள்ளிக்கு அனுப்பாமல் சமூக வலைதளங்களில் காசு சம்பாதிக்கும் நோக்கத்தோடு பயன்படுத்துகிறார் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்துள்ளார். குழந்தையை தான் பார்த்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

உயிருக்கு உலைவைக்கும் உணவுகள்! மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க
நித்யா அதிரடி
இதுகுறித்து நித்யா போனில் செய்தியாளர் ஒருவரிடம், நேரடியாக நீதிமன்றத்தில் சந்தித்துக்கொள்வதாகவும் பாலாஜி கூறுவது எல்லாம் பொய் என்று கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் இருவரும் கலந்து கொண்டபோது உங்கள் இருவருக்கும் கமல்ஹாசன் நிறைய அறிவுரைகளை வழங்கினாரா என கேட்ட கேள்விக்கு, "அந்த ஆள பற்றி பேசாதீங்க.. நிறைய கன்டென்ட் கொடுத்துவிடுவேன்.. அவர் ரொம்ப வொர்ஸ்ட்.. கமல் மாதிரி ஒரு ஆள நான் பார்த்ததே கிடையாது" என கோபத்துடன் பேசி போனை வைத்துவிட்டாராம்.

கமல் ரசிகர்கள் அதிர்ச்சி
நித்யா மீது ஏகப்பட்ட புகார்களை தாடி பாலாஜி முன் வைத்து சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில், தற்போது கமல் பற்றி இப்படி நித்யா பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கமல் ரசிகர்கள் நித்யாவை திட்டித் தீர்த்து வருகின்றனர். நித்யா பிக்பாஸ் வீட்டில் என்ன எல்லாம் நடந்தது என்பதை போட்டு உடைப்பாரா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.