அதிரடியாக நாமினேட் செய்யப்பட்ட 5 போட்டியாளர்கள்! பிக்பாஸ் கூறிய காரணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் அசல் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து மற்றும் சாந்தி, நேற்றைய தினம் அசல் என 3 பேர் வெளியேறிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.
பிக்பாஸும் போட்டியாளர்களிடையே கடுமையாக சண்டையை ஏற்படுத்தும் டாஸ்க்கை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற பொம்மை டாஸ்க் மிகவும் அதிரடியாக சென்றது.
இந்நிலையில் இன்று நாமினேஷனுக்காக போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் அசீம், விக்ரமன், ஆயிஷா, ஷெரினா, கதிரவன் என ஐந்து பேர் அடுத்த நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.