Bigg Boss: ஜாக்குலினுக்கு எதிராக திரும்பிய சௌந்தர்யா... எதிர்பாராத ப்ரொமோ காட்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ள நிலையில், ஒருவரை ஒருவர் பல காரணங்களை முன்வைத்து நாமினேஷன் செய்துள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். இந்த வாரத்திற்கான நாமினேஷனும் நடைபெற்றுள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களைக் கூறி நாமினேஷன் செய்துள்ள நிலையில், சௌந்தர்யா ஜாக்குலினை நாமினேஷன் செய்துள்ளார்.
இன்னும் 5 வாரங்களே உள்ள நிலையில், உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் அடுத்தடுத்து வெளியேறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |