Bigg Boss 9: இன்று வெளியேறும் நபர் யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ரெட் கார்டு கொடுத்து பார்வதி, கம்ருதின் வெளியே அனுப்பப்பட்ட நிலையில், இன்று எவிஷ்ன் கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் 9 போட்டியாளர்கள் விளையாடி வந்த நிலையில், டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் கடுமையான சண்டை அரங்கேறியது.
இதில் அரோரா டிக்கெட்டை வென்று முதல் பைஃனலிஸ்ட் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் கடைசி டாஸ்கின் போது கம்ருதின், பார்வதியின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் இணையத்தில் பயங்கரமாக கொந்தளித்த ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.
இந்நிலையில் இன்று வெளியேறும் போட்டியாளர் யார்? என்று விஜய் சேதுபதி கார்டை காட்டியதும், அனைவரும் துள்ளி குதித்துள்ளனர். இதனால் இந்த வாரம் எவிக்ஷனிலிருந்து தப்பித்துள்ளனர்.
மேலும் மற்றொரு ப்ரொமோ காட்சியில் விஜய் சேதுபதி விக்ரம் சில தினங்களுக்கு முன்பு நடந்து கொண்ட விதத்தினைக் குறித்து சத்தம் போட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |