ஆதி மோசடி விவகாரம்: தாமரை வெளியிட்ட அதிர்ச்சி உண்மைகள்
சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் ஆதி பற்றி பல உண்மைகளை தாமரை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி வைரலாகி வருகின்றது.

தாமரை பகீர் தகவல்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஸ்வேதா. சமீபத்தில் இவர் பற்றி பல சர்ச்சைகள் வெளியாகி வருகின்றது.
இந்த நிலையில் ஸ்வேதாவின் கணவர் ஆதி என்பவர் பல பெண்களிடம் பணம் மற்றும் நகை மோசடி செய்து பல பெண்களை ஏமாற்றியதாக ஸ்வேதாவின் கணவர் ஆதிமேல் பெண்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து பிக் பாஸ் மூலம் பிரபலமான தாமரை பல விடயங்களை கூறி உள்ளார். பிக் பாஸ் மூலம் பல தனக்கென ரசிகர்களை ஈர்த்தவர் தான் தாமரை. இவர் அதி மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
தாமரை கூறும் போது “சின்ன மருமகள் சீரியலில் நடித்தபோது தனக்கும் ஸ்வேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஸ்வேதா ஆதி என்பவரை தனது கணவர் என அறிமுகம் செய்து வைத்தார். ஸ்வேதா ஆதியை திருமணம் செய்ததால் ஸவேதாவின் குடும்பத்தினர் அவரை வீட்டில் சேர்க்கவில்லை.

இதனால் ஸ்வேதா மற்றும் ஆதி என்னுடைய வீட்டில் தங்கி இருந்தார்கள்.
ஆதியும் ஸ்வேதாவும் பிரிந்தபின்னர் ஆதி என்னிடம் பணம் மற்றும் நகைகளை வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றி இப்போதெல்லாம் யாரை நம்புவதென்றே தெரியவில்லை.
இவன் மட்டும் ஏமாற்றினா இல்லை இரண்டு பேரும் சேர்ந்து ஏமாத்திடாங்களா ஒண்ணும் புரியல” என்று தாமரை செல்வி பல விடயங்களை கூறி உள்ளார். இன்னும் பல விடயங்களை இந்த காணொளி மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |