பண பிரச்சனை... கணவரின் பிரிவு! பிக்பாஸ் தாமரை எடுத்த முடிவு
Bigg Boss Thamarai: பிக்பாஸ் தாமரை தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை, பணப்பிரச்சனை சர்ச்சைக்கு மத்தியில் தற்போது முக்கியமான முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்.
பிக் பாஸ் தாமரை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தாமரை செல்வி. பிக்பாஸ் வீட்டில் 92 நாட்கள் இருந்து விளையாடினார்.
இவர் திருவிழா மேடைகளில் நடனமாடும் கலைஞராக வந்த நிலையில், முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவர் பார்த்தசாரதி என்பவருடன் வாழ்ந்து வந்தார்.
பிக்பாஸிற்கு பின்பு சீரியல் மற்றும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். மேலும் சமீப காலமாக எக்ஸ்போ போட்டும் சம்பாதித்து வருகின்றார்.
ஆனால் சமீபத்தில் இவர் எக்ஸ்போ போடுவதாக கூறி ஸ்டால் உரிமையாளர்கள் பலரிடம் ரூ. 5000 வீதம் பெற்றுக்கொண்டு, கடைசியில் எக்ஸ்போ போடாமல் விட்டதுடன், அதற்கான பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் பலரும் காணொளி வெளியிட்டு தாமரையிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு முதல் காணொளியில் தரமுடியாது என்று கூறியவர், அடுத்து காணொளி வெளியிட்டு தான் உங்க பணத்தினை திருப்பி கொடுத்துவிடுவேன்.
தற்போது மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பதாக கூறியிருந்தார். இதற்கிடையே தாமரையை பிரிந்துவிட்டதாக அவரது கணவர் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

மீண்டும் மேடை நாடகம்
புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சேர்ந்த இவர் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக மேடை நாடங்களில் நடித்துள்ளார். இதன் மூலமாகவே இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
ஏற்கனவே முதல் கணவரை பிரிந்த இவர் இரண்டாவது பார்த்தசாரதி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், பரஸ்பரமாக இருவரும் பிரிவதாக பதிவு வெளியிட்டதற்கு தாமரை எந்தவொரு பதிலும் இதற்கு கொடுக்கவில்லை.
தற்போது எக்ஸ்போ பணப் பிரச்சனை மற்றும் குடும்பத்தில் தனிப்பட்ட பிரச்சனையும் இருந்து வருவதால் தாமரை தற்போது சில முடிவிற்கு வந்துள்ளார்.

நாடகக்கலை உலகத்திலிருந்து மீடியாவிற்கு வந்தேன்... பிக்பாஸில் கலந்து கொண்டு அதிகமான சீரியல், படங்களில் நடித்துள்ளேன். தற்போது இரண்டு படங்கள் வெளியாக உள்ள நிலையில் இருப்பதாகவும், சினிமா இல்லாத நேரத்தில் மீண்டும் நாடக துறைக்கு செல்ல முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
உங்களது ஊரில் திருவிழா மற்றும் விசேஷம் இருந்தால் கண்டிப்பாக கூப்பிடுங்க... என்னை வளர்த்த கலையையும், சினிமா துறையையும் விட்டு ஒருபோதும் போகமாட்டேன் என்று கூறியுள்ளார்.
பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தாமரை எடுத்துள்ள இந்த முடிவிற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |