சீரியலில் கொட்டும் பணம்.. புதிய கார் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்- எத்தனை லட்சம் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கூத்து கலைஞர் தாமரை செல்வி தற்போது புதிய கார் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தாமரை செல்வி
தெருக்கூத்து கலைஞரான தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு அப்போது ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சின்ன மருமகள்” சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக நடித்து வருகிறார். அத்துடன் தாமரை செல்வி, நடிப்பை தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அதில் சமையல் வீடியோ உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். தாமரை செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவருடைய பெற்றோர் தங்குவதற்கு சரியான வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.
காரின் பெறுமதி
இந்த நிலையில், கடந்த வருடம் தாமரை புதிய வீடு கட்டி, கிரஹப்பிரவேசம் செய்தார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக இருந்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் தாமரையின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஒரு புதிய காரை வாங்கியுள்ளார்.
இவர், வாங்கியுள்ள காரின் விலை சுமார் 7 முதல் 8 லட்சம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.