Bigg Boss: நட்பு எனது விளையாட்டை பாதிக்கக்கூடாது? சௌந்தர்யா, ஜாக்குலின் மோதல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சவுந்தர்யா மற்றும் ஜாக்குலின் இடையே தற்போது சண்டை வெடித்து வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர்.
இதில் இந்த வாரத்திற்கு ராணவ், விஷால், பவித்ரா, அருண், தீபக், மஞ்சரி, ரயான், ஜாக்குலின் என 8 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் மட்டும் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
விஷாலிடம் சௌந்தர்யா அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார். ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா இடையே உள்ள நட்பில் விரிசல் ஏற்பட்டு வருகின்றது. எனது விளையாட்டு பாதிக்கப்படுவது நியாயம் இல்லை என்று சௌந்தர்யா கூறிவருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |