பெயரை மாற்றிய எலான் மஸ்க்.. எகிறும் பிட்காயின் மதிப்பு-விவாதத்தில் நெட்டிசன்ஸ்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் இருந்து வருகிறார்.
இவர், எக்ஸ் தளத்தின் சுயவிவரப் பெயரை "கெக்கியஸ் மாக்சிமஸ்" என மாற்றியுள்ளார்.
அத்துடன் பிரபலமான "பேபே தி ஃபிராக்" மீமின் படத்தையும் தனது சுயவிவரப் படமாக மாற்றியுள்ளார்.
அந்தப் படத்தில், பேபே தி ஃபிராக் தங்க கவசம் அணிந்து, வீடியோ கேம் கன்ட்ரோலர் ஒன்றை வைத்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், "கெக்கியஸ் மாக்சிமஸ்" பற்றிய மேலதிக தகவல்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
கெக்கியஸ் மாக்சிமஸ் என்பது என்ன?
"கெக்கியஸ் மாக்சிமஸ்" என்பது ஈத்தேரியம் மற்றும் சோலானா போன்ற பல்வேறு பிளாக்செயின் தளங்களில் இயங்கும் ஒரு மீமால் ஈர்க்கப்பட்ட கிரிப்டோகரன்சி டோக்கனாகும்.
கிரிப்டோகரன்சி சந்தையில் இந்த டோக்கன் ஒரு குறிப்பிடத்தக்க வரவேற்பை தான் பெற்றிருந்தது.
கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி நிலவரப்படி, "கெக்கியஸ் மாக்சிமஸ்- மதிப்பு சுமாராக $0.005667 ஆக இருந்தது. மாறாக எலான் மஸ்க் தனது பெயரை மாற்றியப்பிறகு, 24 மணி நேரத்தில் பிட்காயினின் மதிப்பு சுமார் 497.56 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து எலான் மஸ்க் எக்ஸில் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ கெக்கியஸ் மாக்சிமஸ் விரைவில் ஹார்ட்கோர் PoE-இல் நிலை 80 ஐ எட்டும்..” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி எக்ஸ் பயனர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |