கதறிய பெண்கள்! முதல் குறும்படம் வெளியானது...காலில் விழுவார்களா போட்டியாளர்கள்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் குறும்படம் வெளியாகும் என்று நெட்டிசன்கள் கணித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து போட்டிகளும் சூடுப்பிடித்து வருகின்றது.
தற்போது நடந்து வரும் பொம்மை டாஸ்க் பல போட்டியாளர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொம்மை டாஸ்க்கில் வெடித்த சர்ச்சை
குறிப்பாக தனலட்சுமி மிகவும் வைலண்ட் ஆக விளையாடுகிறார் என்று பலர் குற்றம்சாட்டி அவரை ஓரம் கட்டியுள்ளனர். ஆனால் தனலட்சுமி தான் யாரையும் தள்ளிவிடவில்லை என்றும் குறும்படம் வேண்டுமானால் போடட்டும்.
என் மீது தவறு என்றால் நான் அனைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.குறும்படத்தில் தவறு இல்லை என்று காட்டப்பட்டால் குற்றம் சாட்டிய எல்லோரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் நெட்டிசன்கள் தற்போது இந்த டாஸ்க்கின் வீடியோவை வெளியிட்டு தவறு யார் மேல் என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.
Dhanalakshm narration of the incidence #BiggBoss6 #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/rUYm45VNoq
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 26, 2022
யார் மேல் தவறு?
இந்த வீடியோவில் ஷெரின் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருமே ஒரே நேரத்தில் தள்ளிவிடப்படுகிறார்கள்.
தனலட்சுமி உடனே எழுந்து மீண்டும் தனது முயற்சியை தொடர்கிறார். ஆனால் ஷெரின் தலையில் காயம் அடைந்ததை போல் கத்துகின்றார். இதன் பிறகு தான் அசீமுக்கும் தனலட்சுமிக்கும் சண்டை வருகிறது.
இந்த குறும்படத்தினை ரசிகர்கள் வெளியிட்டு இந்த வாரம் பிக் பாஸில் முதல் குறும் படம் வெளியாகும் என்று கூறி வருகின்றனர்.
???#BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss pic.twitter.com/7cOSCV5w6U
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 26, 2022