Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்!
நாளை அக்டோபர் ஐந்தாம் திகதி பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், தற்போது போட்யாளர் விபரங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் -9
சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
பிக் பாஸ் பிரபல தொலைக்காடயில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
கடந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முதல் உள்ள 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
அதே போன்று இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
போட்டியாளர்கள் விபரம்
நாளை அக்டோபர் ஐந்தாம் திகதி பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், நேற்றிரவே போட்டியாளர்கள் அனைவரும் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் இப்போது ஒவ்வொன்றாக இணையத்தில் கசிந்து வருகின்றது. ஏற்கனவே வெளியான சில தகவல்களின் பிரகாரம், தர்பூசணி நகைச்சுவையாளர் வாட்டர்மெலன் திவாகர் மற்றும் இயக்குநர் பிரவீன் காந்தி போன்ற சிலர் இந்த சீசனில் நிச்சயம் பங்கேற்கிறார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
தற்போது, இறுதி நேரத்தில் நிகழ்ச்சிக்குள் நுழைந்திருக்கும் மேலும் சில சுவாரஸ்யமான போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் 'மகாநதி' தொடரில் நடித்து வந்த நடிகர் கமருதீன்,சீரியல் நடிகர் சபரி, சமூகப் போராளியான ஒரு திருநங்கை, பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர், கடல் தொடர்பான வீடியோக்கள் மூலம் பிரபலமான ஒரு யூடியூபர் மற்றும் சில பொதுவான புதுமுகங்கள் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த முறை, முந்தைய சீசன்களைப் போல வைல்டு கார்டு எண்ட்ரி (Wild Card Entry) இருக்காது என்ற ஒரு தகவலும் பரவலாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆரம்பிக்கும் முன்னரே பிக்பாஸ் சீனன் 9 க்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுப்பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |