நெற்றிவகிட்டில் குங்குமத்துடன் ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்ட காணொளி! குழப்பத்தில் ரசிகர்கள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமி அண்மை காலமாக தனிமையில் இருக்கும் காணொளிகளை அதிகமாக பகிர்ந்து வந்த நிலையில், நெற்றிவகிட்டில் குங்குமத்துடன் பக்கா குடும்பாங்கினியாக தற்போது வெயிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரச்சிதா மகாலட்சுமி
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் ஒருவராக உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
புதிய வீடு வாங்கி அம்மாவுடன் குடியேறிய இவர், அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6இல் கலந்து கொண்டார்.
தற்போது படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சினிமாவில் அறிமுகமாகிய பின்னர் அண்மை காலமாக தாராள கவர்ச்சி காட்டி சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றார்.
மேலும் அண்மை காலமாக தனிமையில் இருக்கும் காணொளிகளை அதிகமாக பகிர்ந்து வந்த இவர் தனிமையில் சுற்றுலா சென்ற புகைப்படங்களும் இணைத்தில் வைரலானது.
இந்நிலையில் திடீரென நெற்றி வகிட்டில் குங்குமத்துடன் பக்கா குடும்பபாங்கினியாக மாறி ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள காணொளியில் இணையத்தில் வைராலாகி வருகின்றது. இந்த கெட்டப் ஒரு படப்பிடிப்புக்காக என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |