அதிக வாக்குகள் பெற்றும் விஜய்சேதுபதியால் வெளியேற்றப்பட்டாரா சிவகுமார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சிவகுமார் வெளியேற்றப்பட்டது தொடர்பாக காரணங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சிவகுமார்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் நான்காம் வார இறுதியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் எண்ட்ரி கொடுத்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வார வாரம் ஒரு போட்டியாளர் போட்டியை விட்டு வெளியேறுவார்கள்.
தற்போது வரை இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகிய 6 பேர் போட்டியை விட்டு வெளியேறி சென்றுள்ளனர்.
கடந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுத்ததால் போட்டியார்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக விளையாடினார்கள்.
இந்த பொம்மை டாஸ்கில் ஜெப்ரி வெற்றி பெற்றார். இந்த வாரம் நிகழ்ச்சியில் 10 போட்டியாளாகள் நாமினேட் ஆகி இருந்தனர்.
இதில் மிகவும் குறைவான வாக்குகளை சாச்சனா பெற்றிருந்தாலும், வெளியேற்றப்படவில்லை, அதற்கு பதிலாக சிவகுமாரை வெளியேற்றிவிட்டதாக நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
பொதுவாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் மக்களின் வாக்குகளை தாண்டி அவர்கள் கன்டன்ட் கொடுத்தால் மட்டுமே அந்த வீட்டிற்குள் இருக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |