நா சந்தோஷமா இல்ல.. பாக்கியாவிடம் புலம்பும் ராதிகா- கோபியின் நிலை என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மருத்துவமனையில் கோபியால் படும் அவஸ்தை குறித்து பாக்கியாவிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
இனியா பாக்கியாவிற்கு ஆதரவாக கோபியிடம் பேசிய நிலையில், அதை யோசித்துக் கொண்டிருந்த கோபிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் கோபி உள்ள நிலையில், ராதிகாவிற்கு விடயம் தெரியாமல் இருந்தார். பின்பு பாக்கியா நடந்ததை கூறியதும் கோபியை காண வந்துள்ளார்.
பாக்கியாவிடம் ஆறுதல் தேடும் ராதிகா
இந்த நிலையில் கோபியின் இந்த நிலைக்கு ராதிகாவும், அவருடைய அம்மாவும் தான் என ஈஸ்வரி ராதிகாவை கோபியை பார்க்க மறுக்கிறார். அத்துடன் மருத்துவமனையில் மனைவியாக மீண்டும் பாக்கியாவின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தையும் ராதிகா மருத்துவமனையில் அறிகிறார்.
தொடர்ந்து, கோபியால் பல அவமானங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்து வரும் ராதிகா இதனை யாரிடம் கூறுவது என தெரியாமல் கடைசியாக பாக்கியாவிடம் சென்று கூறியதுடன், “நான் சந்தோஷமாகவே இல்லை... அவர் எப்போதும் உங்களுடைய குடும்பத்தை பற்றியே நினைத்து கொண்டிருக்கிறார்...” என சோகமாக கூறுகிறார்.
மயூவுடன் தனியாக வாழ்ந்த வாழ்க்கையிலும் பார்க்க கோபியுடன் வாழ்வது கடினமாக இருப்பது போன்று கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் அவருடைய வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை பகிர்ந்துக் கொண்டதுடன் பாக்கியாவின் தோலில் சாய்ந்து கொள்கிறார். தன்னுடைய நிலைமை மற்றவர்களுக்கு வரக்கூடாது என நினைக்கும் பாக்கியா ராதிகாவிற்கு ஆதரவாக நிற்கிறார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |