பிக்பாஸ் 8 போட்டியாளர்கள் பட்டியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்- அப்போ இவர் வரமாட்டாரா?
பிக்பாஸ் சீசன் 8 கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 8
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
இப்படியொரு நிலையில் திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனை அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி வட்டாரங்களை துருவிய போது நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் தொடங்கி விட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சினிமா, டிவி நட்சத்திரங்கள், சோஷியல் மீடியா இன்ஃப் ளூயன்சர் எனப் பல தரப்பிலிருந்து சிலரது பெயர்கள் டிக் செய்யப்பட்டு சேனல் தரப்பு அவர்களை அணுகி வருவதாகச் சொல்லப்படுகிறது.
போட்டியாளர்களின் விவரங்கள்
கடந்த சீசன்களில் முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காதவர்களின் பெயர்களும் விஜய் டிவியுடன் நெருக்கமான தொடர்புடைய ஆர்ட்டிஸ்ட்டுகள், மற்றும் நடிகர் அஸ்வின், ஜாக்குலின் முதலானவர்களின் பெயர்களும் போட்டியாளர்களில் லிஸ்ட்டில் அடிபட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போதை நிலவரப்படி சின்னத்திரை நடிகர் அருண் பிரசாத். டிடிஎஃப் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஷாலின் சோயா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி நடிகை ஃபரீனா உள்ளிட்டோர் பெயர்கள் இருக்கின்றது.
அத்துடன் விஜய் டிவி தொகுப்பாளர்களில் ஒருவரான மாகாபா, கலக்கப்போவது யாரு புகழ் ராமர், "காத்து மேல" பாடல் பால் டப்பா, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், அமலா ஷாஜி போன்றவர்களின் பெயர்களும் உள்ளன.
கடந்த சீசன்களை விட இந்த சீசன் படு பயங்கரமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்தால் எப்படியெல்லாம் இருக்கும் என தற்போதே கருத்து கணிப்புகள் ஆரம்பித்து விட்டன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |