அசிங்கமாக பேசிய ராணவை விளாசிய சௌந்தர்யா.. பரபரப்பில் பிக்பாஸ் Housemets
ஜாக்குலினிடம் அசிங்கமாக பேசிய ராணவை சௌந்தர்யா விளாசியுள்ளார்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் நடக்கப்போகின்ற அந்த 100 நாள் நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பணிகளை காரணமாக வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது பலரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மொத்தமாக18 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கும் பொழுது இருந்தார்கள். தற்போது 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஏழு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஆறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
அசிங்கமாக பேசிய ராணவ்
இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பொம்பை டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில், ராணவ் மற்றும் ரயான் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறியுள்ளது.
ரயானை விட்ட ராணவ், ஜாக்குலினிடம் சண்டைக்கு செல்கிறார். அந்த சமயத்தில் ஜாக்குலினிடம் கடும்கோபத்தில் அசிங்கமான வார்த்தைகளால் பேசுகிறார்.
இதனை கேட்டுக் கொண்டிருந்த சௌந்தர்யா அதே வார்த்தையை மீண்டும் பயன்படுத்தி ராணவை திட்டுகிறார். தவறாக பேசியதற்கு ராணவ் மன்னிப்பு கேட்க, “நான் ஒன்ன பளார்ன்னு அறைச்சிட்டு.. மன்னிச்சிருங்க. என கூறினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீரா?” என ஜாக்குலின்- ராணவ் வாதம் பெரிதாகியுள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |