ஆரம்பிக்கலாமா?.. பிக்பாஸ் சீசன் 5 டீசரில் இதை கவனிச்சீங்களா? லீக்கான சுவாரஷ்யமான தகவல்
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த பிக்பாஸ் சீசன் 5 குறித்த அதிகாரப்பூர்வ டீசரை விஜய் தொலைக்காட்சி நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த டீசரில் நடிகரும், அரசியல்வாதியும், பிக்பாஸ் தொகுப்பாளரும் கமல்ஹாசன் தன் விக்ரம் பட டைட்டில் இசையோடு ''ஆரம்பிக்கலாமா?'' என தொடங்கிவைக்கிறார்.
சீசன் 5 ஸ்பெஷலாக பிக்பாஸ் கண் லோகோ பிங்க் நிறத்திற்கு மாறி கண்ணைப் பறிக்கிறது.
கண் வடிவ லோகோவினுள் ஸ்டார் விஜய் லோகோ குறியீடாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் விக்ரம் பட ஸ்டைலில் கமல் கூறிய வார்த்தையை சற்று ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.
ஏற்கனவே பிக் பாஸிற்கு அமைக்கப்பட்ட செட்டில் விக்ரம் பட சூட்டிங் காட்சி சில எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பிக்கலாமா? ? #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/Nozd1mE21X
— Vijay Television (@vijaytelevision) August 31, 2021