Bigg Boss 9: பிக் பாஸில் முதல் வாரத்துடன் வீட்டுக்கு கிளம்பிய போட்டியாளர் யார்?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 9
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் வாரமே பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. என்ன தான் சில போட்டியாளர்கள் இந்த பிக் பாஸில் கலந்துகொண்டது பிடிக்கவில்லை என்றாலும் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பார்ப்பதற்காகவே மக்கள் அதிகம் பார்க்கின்றனர்.
கடந்த வாரம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி இந்த ஞாயிற்றுக்கிழமையுடன் ஒருவாரத்தை நெருங்குகிறது. இது கடந்த சீசன்களை போல இல்லாமல் சற்று வித்தியாசமாக டாஸ்குகள் மற்றும் சட்ட திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாட்டர் மெலன் திவாகர், ஆதிரை, கனி, கலை, வி.ஜே.பார்வதி, விக்னேஷ், கம்ருதின் என அனைவரும் தொட்டதற்கெல்லாம் சண்டை போட்டு பரபபரப்பாக நாளை கடத்தி வருகின்றனர்.
முதல் வாரத்திலேயே பல சண்டை சச்சரவுகள் நடந்துள்ளன. இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளரின் தகவல் வெளியாகி உள்ளது.
வெளியேறிய போட்டியாளர்
முதல்வார எவிக்ஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டியிலிருந்து ஒருவர் வெளியேறியிருக்கிறார். அவர் தான் நந்தினி. தவிர்க்க முடியாத காரணங்கள் போட்டியாளர் நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தற்போது முதல் வாரத்தில் எவிக்ஷன் இருக்குமா? என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது. பொதுவாக முதல் வாரத்தில் எவிக்ஷன் நடைபெறாது.
ஆனால் கடந்த சீசனில் முதல் வார எவிக்ஷன் இருந்தது. இந்த நிலையில் நாமினேஷன் மற்றும் ரசிகர்களிடம் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இயக்குநர் பிரவீன் காந்தி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |