பிக் பாஸில் இருந்தது 70 நாட்கள் ஆனால் சம்பளம் மட்டும் இவ்வளவா?சத்யா - தர்ஷிகா சம்பள நிலவரம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் வெளியேறிய 2 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது பற்றிய முழு விபரத்தை இங்கு பார்க்க முடியும்.
சத்யா - தர்ஷிகா சம்பள நிலவரம்
கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து, தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் தற்போது பத்தாவது வாரம் நடைபெற்று வருகின்றது.
கடந்த ஒன்பதாவது வாரத்தில் சாச்சனா மற்றும் ஆனந்தி என்ற இரு போட்டியாளர்களும் வெளியேறி சென்றனர். இந்த பத்தாவது வாரத்திலும் கடந்த வாரத்தை போல இருவர் வெளியேறி செல்ல உள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சத்யா வெளியேறி சென்ற நிலையில் இன்று தர்சிகா வெளியேறி செல்ல உள்ளார். அந்த வகையில் இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் பயணிக்க வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார். இவருக்கு மொத்தம் 70 நாட்களுக்கு ரூ.14 லட்சம் சம்பளமாக கொடுக்கபட்டுள்ளது.
அடுத்த போட்டியாளரான தர்ஷிகா ரூ.15,000 சம்பளமாக பெற்றுள்ளார். இவருக்கு மொத்தமாக 10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளத்துடன் இன்று வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |