22 வயது பெண்னை காதலிக்கும் வனிதாவின் கணவர் ராபர்ட் ! வயது வித்தியாசத்தால் வெடித்த சர்ச்சை
Nivetha
Report this article
ராபர்ட் மாஸ்டர் 22 வயது பெண்ணை காதலிக்கும் விடயத்தினை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல் பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்தார்.
அன்றைய வாரம் நடைபெற்ற பல்வேறு விடயங்கள் குறித்த விவாத நடந்தது.
பிறகு போட்டியாளர்களுக்கு பொம்மை டாஸ்க் ஒன்றை கொடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கினார்.
அதாவது எதாவது ஒரு போட்டியாளர் தனக்கு பிடித்த சக போட்டியாளரின் பொம்மையை எடுத்து அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்பும் விஷயத்தை சொல்லுங்கள் என கமல் கூறினார்.
22 வயது பெண்னை காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர்
இந்த டாஸ்க்கில் ராபர்ட் மாஸ்டர் உடனே ஆயிஷா பொம்மையை எடுத்து கையில் வைத்து கொண்டு 'எனக்கும் எனது காதலிக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை பற்றி பேசாதீங்க. காதலில் வயது பார்க்காதீங்க' என கூறினார்.
உலகநாயகன் கமல் சென்றபின் மற்ற போட்டியாளர்களிடம் பேசிய ராபர்ட் "எனது காதலிக்கு 22 வயது தான் ஆகிறது. எனக்கு 41 ஆகிறது.
Robert Master to Ayesha#BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil pic.twitter.com/Gn5Wxvot0e
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 29, 2022
பெரியப்பா வயதில் இருக்கும் ஒருவருடன் லவ் என ஆயிஷா எனது காதலை பற்றி தவறாக எல்லோரிடமும் பேசுகிறார். அதனால் தான் எனக்கு கோபம் வந்துவிட்டது என ராபர்ட் மாஸ்டர் கூறி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் வனிதாவின் முன்னாள் கணரான ராபர்ட் மாஸ்டர் 22 வயது பெண்னை காதலிக்கின்றாரா என்று அதிர்ந்து போயுள்ளனர்.