தக்காளியை அதிகமாக சாப்பிடுவதால் எந்த நோய் வரும்?
தக்காளியை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு பிரச்சனை வரும் என்பது கூறப்படுகின்றது.
தக்காளி
எல்லோரது சமையலிலும் தக்காளி இல்லாமல் சமைப்பது கடினமான ஒரு காரியமாகி விட்டது. எல்லா வகையான டிஷ்க்கும் தக்காளி பயன்படுத்துவார்கள். அது மட்டுமல்லாமல் ஏதாவது பொறித்த உணவுகள் சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு தக்காளி சாஸ் தேவைப்படுகின்றது.
தக்காளியில் வைட்டமின் A, C, K, ஃபோலேட் (B9), பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, தோல் மற்றும் எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.
தக்காளியில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றது என்றாலும் அதை அதிகமாகவும் சாப்பிட கூடாது. ஒரு சில நோய் உள்ளவர்களும் இதை சாப்பிட கூடாது.

தக்காளி அதிகமாக சாப்பிடலாமா?
தக்காளியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்றாலும் அவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை விட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
அதிகமாக தக்காளி சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டும் என்றால் தக்காளியை எப்போதாவது உட்கொள்வது சிறந்தது.

தக்காளியில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. எனவே சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக அளவில் தக்காளியை சாப்பிட்டால் அது சிறுநீர்ப்பை எரிச்சலை ஏற்படுத்தும்.
இதுபோன்ற பிரச்சினைகளால் நீங்கள் பாதிக்கப்பட விரும்பவில்லை எனின் அதிகமாக தக்காளி சாப்பிடுவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தக்காளியை சரியான அளவிலும் சரியான முறையிலும் சாப்பிட்டால் மட்டுமே அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

மேலும் தக்காளி விதைகள் சிறுநீரக கற்கள் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும். அதனால்தான் சிறுநீரக கல் பாதிக்கப்பட்டவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அதிக அளவில் தக்காளியை சாப்பிடுவது ஒவ்வாமை எதிர்வினைகளையும் ஏற்படுத்தும். இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |