கொதித்தெழுந்த ஜனனி - இலங்கை பெண்ணின் செயலால் ஷாக்கான பிக் பாஸ் போட்டியாளர்கள்! ஏன் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ன போட்டியாளர் ஜனனி இன்று கொதித்தெழுந்து சக போட்டியாளர்களை திட்டியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் சுற்றுலாவுக்கு வந்தது போல சாப்பிட்ட தட்டை கூட கழுவாமல் பலர் இருப்பதாக ஜனனி குற்றம் சாட்டியுள்ளார்.
நாங்கள் கழிவறையை பயன்படுத்தி விட்டு அப்படியே தண்ணீர் ஊற்றாமல் வந்தால் எப்படி இருப்கும். அப்படி தானே சாப்பிட்ட தட்டை கழுவாமல் செல்வதும் என்றும் ஜனனி குறிப்பிட்டுள்ளார்.
கொதித்தெழுந்த ஜனனி
அது மட்டும் இன்றி நிறைய உணவுகளை போட்டியாளர்கள் வீண் விரயம் செய்வதாகவும் ஜனனி சுட்டிக்காட்டியுள்ளார்.
"உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை“ பிக் பாஸ் வீட்டில் பல போட்டியாளர்கள் உணவை வீண் விரயம் செய்து வருகின்றார்கள்.
இதனை தற்போது ஜனனி தட்டி கேட்டு நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளார்.