மன்னிச்சிடு அண்ணா...இலங்கை ஏடிகேவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஜனனி
இலங்கையில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்ற ஏடிகே மற்றும் ஜனனி இருவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நேற்று பதிவாகியது.
பிக் பாஸ் சீசன் 6-ல் இந்த முறை பலவிதமான போட்டியாளர்கள் வந்துள்ளனர்.
பொதுமக்கள் தரப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டிக் டாக் தனலட்சுமி, திருநங்கை ஷிவின் மற்றுமின்றி அரசியல்வாதி ஒருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்
இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் பல இடங்களில் மோதல்களை ஏற்படுத்துவதை பார்க்க முடிகின்றது.
நேற்று ஏடிகே ஜனனி இருவரும் முட்டி மோதி கொண்டனர். தனக்கு ஜனனி முகமுடி அணிந்து நடிப்பவர் என பட்டம் கொடுத்ததால் ஏடிகே கடும் அதிர்ப்த்தியில் எழுந்து கத்தி விட்டார்.
தனது ஊரை சேர்ந்தவர் என்கிற எண்ணத்தில் இலங்கை பாடகர் ஏடிகே அதிக அளவு பாசத்தினை ஜனனியிடம் காட்டினார்.
ஜனனி அதை கண்டுகொள்ளாமல் முகமுடி அணிந்து நடிப்பவர் என ஏடிகேவுக்கு பட்டம் கொடுத்தது விவாதத்தினை ஏற்படுத்தியது.
மன்னிப்பு கேட்ட ஜனனி
பிறகு அது வீட்டிலும் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் இருவருமே மாறி மாறி மன்னிப்பு கேட்டு கொண்டனர். அண்ணா மன்னிச்சிடுங்க என்று ஜனனியும், கோவமாக பேசியதற்கு ஏடினேவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இணைந்து கொண்டனர்.
எனினும், இந்த பிரச்சினை இத்துடன் முடியுமா? இல்லை அடுத்த வாரம் பூகம்பமாக வெடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.