பிக்பாஸ் வீட்டில் சர்ச்சையைக் கிளப்பி பிரபலமான போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
சர்ச்சைக்குப் பெயர்போன நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இந்த பிக்பாஸ் வீட்டில் சண்டை, காதல், பாசம், பிரிவு எல்லாம் ஒன்றாக கொட்டிக் கிடக்கும் ஒரு இடமாகத் தான் இருக்கிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6 சீசன்கள் முடிந்து தற்போது 7ஆவது சீசன் இந்த மாதம் ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமடையவேண்டும் என்ற எண்ணத்தில் பலர் கலந்துக் கொள்வார்கள்.
அப்படி மக்கள் மனதில் அன்பாலும், அடாவடித் தனத்தாலும் அல்லது சர்ச்சையாலும் பலர் இடம்பிடித்துள்ளனர். அப்படி சர்ச்சையால் பிரபலமானவர்கள் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஜூலி
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர் தான் ஜுலி. அதனைத் தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வீட்டில் பல சர்ச்சைகளில் சிக்கி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதன் பின் தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.
அசீம்
சின்னத்திரை நடிகராக இருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வாகை சூடியவர் அசீம். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு சர்ச்சை இல்லையென்றால் சண்டையோடு தான் ஆரம்பித்து சர்ச்சை நாயகனாக பிரபலமாகி இறுதியில் வெற்றியும் பெற்றார்.
வனிதா
சர்ச்சைக்கு பெயர் போனவர் தான வனிதா. பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்ட இவர் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் மீதும் சண்டைப் போட்டு வெளியேறி மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்து மீண்டும் வெளியேறினார். தற்போது அவரின் மூத்த மகள் ஜோவிகா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அவரும் சண்டைப் போட்டு வருகிறார்
மீரா மிதுன்
தற்போது அடையாளம் தெரியாமல் போன மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாது பல திரைப்பிரபலங்களை வைத்து பல சர்ச்சை தகவல்களை கிளப்பி வந்தார். அதுமட்டுமில்லாது பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரன் மீது பழிகளை சுமத்தி சர்ச்சையைக் கிளப்பினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |