கம்ருதீன் வாழ்க்கையை நீயா நானாவில் கணித்த ஜோதிடர்கள் - வைரலாகும் காணொளி
பிக் பாஸில் சீசன் 9 இல் தற்போது கம்ருதீன் ரெட் கார்ட் வாங்கி நிகழ்ச்சியை விட்டு வெளி சென்றுள்ளார்.
பிக் பாஸ்
பிக்பாஸ் சீசன் தமிழ் இல் 13 வாரங்கள் முடிந்து இன்றுடன் அதாவது ஜனவரி 5 ஆம் தேதியில் இருந்து 14 வது வாரம் தொடங்கவுள்ளது.
தொடக்கத்தில் இருந்து இருக்கும் போட்டியாளர்கள், வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என மொத்தம் 25 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கி இருந்தனர்.
எலிமினேஷன், விருப்பமாக வெளியேறியது, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது என பலர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டும் தான் உள்ளனர்.

இதில் அரோரா மட்டும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டூ ஃபினாலே டிக்கெட்டை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சனிக்கிழமை 4ம் திகதி 2026இல் நிகழ்ச்சியில் இருந்து வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து விஜய சேதுபதி வெளியேற்றினார்.
இந்த சம்பவத்தை ஒளிபரப்பாக்கிய போது பெரும்பான்மையான ரசிகர்கள் பட்டாளம் அதை வரவேற்றனர்.
இன்னும் சிலர் கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல் இணையவாசிகள் மீம் கிரியேட் செய்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

வைரல் காணொளி
இந்த நிலையில் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சி புத்தாண்டுக்கு முந்தைய நீயா நானா நிகழ்ச்சியில், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு இடையேயான உரையாடல் நடந்தது.
அதில் கம்ருதீனும் கலந்து கொண்டு இருந்தார். அப்போது ஜோதிடர்கள் பலரும், கம்ருதீன் சிம்ம ராசிக்காரர் என்பதால் சிம்ம ராசி உடையவர்களுக்கு 2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து சொல்லி இருந்தனர்.

தற்போது அந்த நிகழ்ச்சியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸில் கம்ருதீன் சர்ச்சைக்குரிய வகையில் என்னவெல்லாம் செய்தார் உள்ளிட்ட வீடியோக்களை இணைத்து ஒரு வீடியோ மீமாக உருவாக்கி உள்ளார்கள்.
அதைப் பார்க்கும்போது, ஜோசியர்கள் ஏற்கனவே கட்டங்களை கணித்து எச்சரித்துள்ளனர். ஆனாலும் கம்ருதீன் உஷாராக இல்லாமல், இப்படி செய்துவிட்டாரே என்று கேள்வி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Astrologers predict about #Kamrudin#BiggBossTamil9 #BiggBoss9Tamil #BiggBossTamilSeason9 #BiggBossSeason9Tamil#vijaytelevision#GanaVinoth𓃵#VJParvathy pic.twitter.com/ula5CRtpYK
— Vikash (@iamvikashhh) January 4, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |