பிக்பாஸ் 9 வின்னர் திவ்யாவின் Ex காதலன் இந்த வில்லன் நடிகரா? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் சீசன் 9 இன் டைட்டில் வின்னர் திவ்யா கனேஷ் பிரபல சினிமா நடிகரை திருமணம் செய்யவிருந்த நிலையில், குறித்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போயுள்ளது.
தற்போது அந்த நடிகர் யார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றது.

நடிகை திவ்யா கணேஷ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாக்யலட்சுமி சீரியல் பெருந்தொகையான ரசிகர்களை கொண்ட பிரபல சீரியலாக இருந்தது.

அதில் ஜெனி கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் திவ்யா கணேஷ். இவர் பல தமிழ் சீரியல்களில் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிறகுதான் திவ்யா பிரபலமாக மாறினார்.

இவர், வளர்ந்து வரும் நடிகையாக இருந்த போது, ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ள இருந்தார். ஆனால், அந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது.
அந்த நடிகர் யார் தெரியுமா?
அந்த நடிகர் வேறு யாருமில்லை, ஆர்.கே.சுரேஷ்தான். ஆர்.கே.சுரேஷ் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுள் ஒருவர். ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கின்றார்.

திவ்யா கணேஷிற்கும் ஆர்.கே.சுரேஷிற்கும், 2018ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற இருந்தது. இது, நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் திடீரென திருமணம் நின்றுபோயுள்ளது.
குறித்த விடயம் பற்றி ஏற்கனவே பேசிய திவ்யா கணேஷ், இந்த திருமணம் நின்றதற்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், இந்த விஷயம் தன்னை மிகவும் பாதித்ததாகவும் இதனால் பிறரை நம்புவதற்கு தனக்கு பயமாக இருப்பதாகவும் சில பேட்டிகளின் பொது குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.கே.சுரேஷிற்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் முடித்து தற்போது 2 குழந்தைகள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |