கூடி நின்று எதிர்க்கும் பிக்பாஸ் ஹவுட்மேட்ஸ்.. பார்வதி கொடுத்த மாஸ் ரிப்ளை
பிக்பாஸ் வீட்டில் காலை எழுந்தவுடன் வேலைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் பார்வதி தரமான பதில் கொடுத்திருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த சீசன் ஒட்டுமொத்தமாக வேறு மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்களே அதிகமாக கலந்து கொண்டுள்ளனர். இதனால் துவங்கிய நாள் முதல் இன்று வரை போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமாக உள்ளது.
இந்த சீசனில் சினிமாவில் அறியப்பட்டவர் என்று யாரும் பெரிதாக இல்லை. முதல் வாரம் எவிக்ஷனில் வெளியேறிய பிரவீன் காந்தி மட்டும் தான் சினிமா பிரபலமாக இருந்தார்.
பார்வதியை ஓட விடும் Housemates
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை, சச்சரவு, ரொமான்ஸ் என சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் - கானா வினோத், விஜே பார்வதி - சபரி ஆகியோர் ரசிகர்களால் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள்.
அவர்களது செயல்பாடுகள் விமர்சனத்தை சந்தித்தாலும், அவர்களை வைத்து மீம்ஸ்களும் பறந்து வருகின்றன.
இப்படி சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் பார்வதி காலையில் எழுந்தவுடன் எப். ஜே வேலைச் செய்யும்படி கூற, அதற்கு அவர், “ என்னால் வெறும் வயிற்றில் வேலை செய்ய முடியாது. காபி குடித்த பின்னர் செய்கிறேன்..” என்றார். ஆனால் எப். ஜே ஏற்றுக் கொள்ளாமல் “ விதிமுறைகளை அதிகமாக மீறுகிறீர்களா?” என புது பிரச்சினையை ஆரம்பிக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |