இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 8.. டைட்டில் வின்னர் பரிசு தொகை குறைப்பு- எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 8-ல் டைட்டில் வின்னருக்காக கொடுக்க வைத்திருந்த பணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 8
ஒவ்வொரும் ஆண்டும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசனில் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றது. இன்றைய தினம் மாலை 6 மணியுடன் இந்த நிகழ்ச்சி நிறைவிற்கு வரவிருக்கின்றது.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்த்த வேளையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார்.
ஆரம்பத்தில் இருந்தே மிகவும் நேர்த்தியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, போட்டியாளர்களை பேச விடுவது இல்லை என இவர் மீது விமர்சனம் ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் நிகழ்ச்சி சற்று போர் அடித்தாலும், பின்னர் ரசிக்கப்பட்டது. கடந்த சீசனை போல் டாக்சிக்காக இல்லாமல், போட்டியாளர்கள் நிதானமாக இந்த முறை தங்களின் விளையாட்டை விளையாடினார்கள்.
பணத்தொகையில் மாற்றம்
இந்த நிலையில் பிக்பாஸ் பைனலுக்கான ஷூட்டிங் இன்று முடிந்த நிலையில், அதில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவரை தொடர்ந்து விஜே விஷால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக, மூன்றாவது இடத்தை சௌந்தர்யா பிடித்துள்ளார். நான்காவது இடத்தை ரயானும், ஐந்தாது இடத்தை பவித்ராவும் பிடித்துள்ளனர்.
மொத்தத்தில் பணப்பெட்டி டாஸ்கில் போட்டியாளர்கள் எடுத்த 10 லட்சம் ரொக்கம் போக, மீதம் இருந்த 40 லட்சம் பணம் மற்றும் கோப்பையை முத்து குமரன் தான் தட்டி தூக்கி உள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |