பிக் பாஸ் வெற்றிக்கோப்பையை தட்டித்தூக்கிய வெற்றியாளர்! பெற்ற பரிசுகள் என்ன?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார் முத்துக்குமரன், அவருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிக் பாஸ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ந் தேதி ஆரம்பமானது. இதுவரை இந்நிகழ்ச்சியை கடல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் முதன் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார்.
தொடங்கிய முதல் நாளே 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை பிக் பாஸ் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நிகழ்ச்சி தொடங்கிய 24 மணிநேரத்திலேயே சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லாத காரணத்தினால் தொடங்கியதை அடுத்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே வந்தனர். இதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சுவாரஸ்யத்தில் ஏற்றப்பட்டது.
அதில் பல்வேறு தடைகளை தாண்டி விஷால், முத்துக்குமரன், ரயான், பவித்ரா, செளந்தர்யா ஆகிய ஐந்து பேர் பைனலுக்கு சென்றனர். இவாகளில் மக்களின் வாக்குகள் படி ஐந்தாம் இடம் பிடித்த ரயான் இன்று முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து 4ம் இடம் பிடித்த பவித்ரா வெளியேறினார். இறுதியாக பிக் பாஸிடம் இருந்து விடைபெற்றுக் கொண்ட டாப் 3 போட்டியாளர்களான செளந்தர்யா, முத்துக்குமரன், விஷால் ஆகியோர் நேரடியாக பைனல் நடக்கும் மேடைக்கு வந்தனர்.
பின்னர் மூன்றாம் இடம் பிடித்த விஷாலை எலிமினேட் செய்தார் விஜய் சேதுபதி. இறுதியாக செளந்தர்யா மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் இருந்த நிலையில், அவர்களில் மக்களிடம் அதிக வாக்குகளை பெற்ற முத்துக்குமரனின் கையை உயர்த்தி வெற்றிபெற்றதாக அறிவித்தார் விஜய் சேதுபதி.
இவருக்கு பரிசாக ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதுதவிர பிக் பாஸ் வீட்டில் அதிக முறை கேப்டனாக இருந்த போட்டியாளருக்கு புல்லட் பைக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த பைக்கையும் முத்துக்குமரன் வென்றார். இதுதவிர பணப்பெட்டி டாஸ்கில் வென்ற ரூ.50 ஆயிரமும் முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்டது.
தீவிரப்படுத்தப்படும் இறுதி முடிவுகள்.. தனக்கு தானே சத்தியம் செய்யும் போட்டியாளர்கள-பரபரப்பான நொடிகள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |