மஞ்சரியிடம் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட stars- வன்மத்தை கொட்டும் சத்யா- நடந்தது என்ன?
பிக்பாஸ் வீட்டில் டெவிலாக இருக்கும் போட்டியாளர்கள் மஞ்சரியிடம் வலுக்கட்டாயமாக நட்சத்திரங்களை பிடுங்கி எடுத்துள்ளனர்.
பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை வெடித்து கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம் டெவில்- தேவதைகள் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் வீடே இப்போது இரத்தக்களரியாக மாறி உள்ளது. நேற்றைய தினம் போட்டியாளர்களின் அலப்பறைக்கு எல்லை இல்லாமல் சென்றுக் கொண்டிருந்தது.
இதனால் காலையிலிருந்து 6 ப்ரோமோக்கள் வெளிவந்து எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் டெவில் குழுவில் உள்ள போட்டியாளர்கள் வரம்பு முறை இல்லாமல் தேவதைகளை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
என்ன தான் டாஸ்க்காக இருந்தாலும் ஒரு மனிதாபிமானம் கூட இல்லாமல் மற்ற போட்டியாளர்களை நடத்தி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. ஆரம்பத்தில் சாதுவாக இருந்த போட்டியாளர்கள் தற்போது சுயரூபத்தை காட்ட தொடங்கிவிட்டார்கள்.
இதனால் தினமும் ஒரு சண்டை வெடித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஜாக்குலின், சௌந்தர்யா, ரயான், அருண் ஆகியோரின் குணங்கள் பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது.
மஞ்சரியிடம் பிடுங்கி எடுக்கப்பட்ட Stars
இந்த நிலையில், மஞ்சரி இன்றைய தினம் தேவதையாக இருக்கிறார். இதனால் இவரிடம் இருந்த நட்சத்திரங்களை பேயாக இருக்கும் போட்டியாளர்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கி எடுத்துள்ளனர். அந்த குழுவிற்கு சத்யா மற்றும் ஜெப்ரி இருவரும் தலைமை தாங்கியுள்ளனர்.
இது குறித்து மஞ்சரியிடம் பேசிய ஜெப்ரி மற்றும் சத்யா,“ நீங்கள் இப்படி தானே நேற்றைய தினம் எங்களை செய்தீர்கள். நீங்கள் செய்தால் நல்லம், நாங்கள் செய்தால் என்ன?” முழு வன்மத்தை போட்டியாளர்கள் கொட்டி வருகிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவை பார்க்கும் பொழுது நிச்சயம் விஜய் சேதுபதி வார இறுதியில் இந்த டாஸ்க் குறித்தும் போட்டியாளர்களின் அடாவடித்தனம் குறித்தும் பேசுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
“போட்டியாளர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாதா?” என நெட்டிசன்கள் ஒரு பக்கம் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். விஜய் சேதுபதியிடம் “அனைவருக்கும் நல்ல விடயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்” என சிலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |