இது ஒன்னும் உங்க அப்பா வீடு இல்ல.. பிக்பாஸில் வெடித்த சண்டை- சௌந்தர்யாவின் அடாவடித்தனம்
ஜாக்குலின்- தர்ஷிகா வாதம் பிக்பாஸ் வீட்டை இரண்டாக்கியுள்ளது.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதுவரையில், நடந்த எவிக்ஷன்களில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவக்குமார் ஆகிய 7 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.
இதற்கு போட்டியாளர்களுடன் இணைந்து பிக்பாஸ் ஊழியர்களும் தான் என தகவல்கள் கூறுகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டாலும் அவர்களை கண்காணிக்கு நூற்றுக்கணக்கான கேமராக்கள் உள்ளே வைக்கப்பட்டுள்ளன.
அவர்களை நிர்வகிக்க தனி டீம், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அசோசியேட் இயக்குனர்கள் என 500க்கும் மேற்பட்டோர் உள்ளே வேலைப்பார்க்கின்றனர்.
சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு
இந்த நிலையில், இன்றைய தினம் பேய்கள் மற்றும் ஏஞ்சல்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கினால் ஜாக்குலின்- தர்ஷிகாவிற்கு பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது.
அதில் தர்ஷிகா, “ என்னை ச்சீ போ-ன்னு சொல்லாத..” என அழுத்தமாக கூறுகிறார். அதற்கு ஜாக்குலின், “ அப்படி தான்டி சொல்லுவே...” என திமிறாக பதிலளிக்கிறார்.
ஜாக்குலின் பேச்சால் உச்சக்கட்டமாக கடுப்பான தர்ஷிகா, “ என்ன வேணும்னாலும் பேச இது ஒன்னும் ஓ அப்பா வீடு இல்ல..” என கூறி விடுகிறார். இதனால் பக்கத்தில் பார்த்து கொண்டிருந்த சௌந்தர்யா கோபத்தில் தர்ஷிகா அடிக்கச் செல்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |