கணிப்பு பலித்தது.. பிக்பாஸில் Wildcard என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்!
பிக்பாஸ் 7 ல் Wildcard என்ட்ரியில் முக்கியமான இரண்டு பிரபலங்கள் வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
Wildcard என்ட்ரி
இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
இப்படியொரு நிலையில் நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை அடித்து காயப்படுத்தி கொண்டனர். இதனால் டாஸ்க் பிக்பாஸால் இடைநிறுத்தப்பட்டது.
அத்துடன் அடுத்து வரும் வாரங்களில் பிக்பாஸ் 7 ற்கு Wildcard என்ட்ரியாக கானா பாலா மற்றும் அர்ச்சனா இருவரும் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் இயற்கையாக நன்றாக பேசக்கூடியவர்கள் இவர்கள் வீட்டிற்குள் வந்தால் இரண்டாக இருக்கும் வீட்டை தெறிக்க விடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |