கண்ணீருடன் ட்வீட் செய்த பூர்ணிமா: விளாசி தள்ளும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பூர்ணிமா தற்போது கண்ணீருடன் பதிவு ஒன்றினை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கோலகமாக ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக முடிந்தது. இதில் அர்ச்சனா டைட்டில் வின்னரான நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 16 லட்சம் பணத்துடன் வெளிவந்த பூர்ணிமா கண்ணீருடன் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.
மாயா மற்றும் பூர்ணிமா இடையே ஏற்பட்ட நட்பு வெளியே ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. தொடர்ந்து விஷ்ணு விஜய்க்கும் இவருக்கும் இடையே காதலும் மலர்ந்தது.
ஆனால் இந்த காதல் குறித்து வெளியே தற்போது எந்தவொரு பேச்சையும் இருவரும் பேசவில்லை. பிக் பாஸ் வீட்டிலிருந்து 16 லட்சம் பணத்தை எடுத்து வெளியே செல்லும் போது ஒட்டுமொத்த போட்டியாளர்கள் முன்பும் சாஷ்டாங்கமாய் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்.
ஆனாலும் பூர்ணிமாவுடன் சேர்ந்து இவர் செய்த சேட்டையை ரசிகர்கள் மறக்காமல் கேள்வியை எழுப்பி வருகின்றனர். தற்போது பூர்ணிமா பதிவிட்டுள்ளது என்னவெனில், ஒரு வழியாக எல்லாம் முடிந்துவிட்டது. உங்கள் அன்பும், ஆதரவும் என் மனதை நெகிழ வைக்கின்றது.
Hi nga!
— Poornima Ravi (@IamPoornimaRavi) January 16, 2024
Finally it's over. That was my quick thrilling zipline journey of bigg boss. Ungal anbum, aadharavum en manadhai negizha veikindradhu. Kindly let my actions speak about how grateful I am for such immense love and support. Overwhelming nga. Take care nga.
With tears,… pic.twitter.com/crgKccU392
உங்களின் அளவு கடந்த அன்புக்கும், ஆதரவுக்கும் நான் எந்த அளவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதை என் செயல்கள் நிரூபிக்கட்டும். டேக் கேர்ங்க. கண்ணீருடன் பூர்ணிமா ரவி என தெரிவித்துள்ளார்.
பூர்ணிமாவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் மாயாவுடன் சேர்த்து வைத்து அவரை கடுமையாக சத்தம் போட்டும், கிண்டல் செய்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |