ரவுண்டு கட்டி அடிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. கண்ணீர் விடும் அர்ச்சனா- பரபரப்பான ப்ரோமோ
சக போட்டியாளர்கள் பேசுவதை கேட்டு மீண்டும் அர்ச்சனா கண்ணீர் விட ஆரம்பித்துள்ளார்.
பிக்பாஸ்
இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இடம்பெறவுள்ளது.
இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
இதில் முக்கிய போட்டியாளராக இருந்து வரும் விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது. இவர் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் எனவும் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றது.
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்த பின்னர் இந்த சீசன் எப்படி இருக்க போகின்றது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அந்த இடத்தை தன்வசப்படுத்தியவர் தான் அர்ச்சனா.
மறுபடியும் அழ ஆரம்பித்த அர்ச்சனா
இந்த நிலையில் கடைசி வாரத்திற்குள் சென்ற போட்டியாளர்களில் ஒருவராக அர்ச்சனாவும் விளையாடி வருகிறார்.
மேலும் இந்த வாரத்திற்கான வொர்ட்டிங் தான் “யார் சீசன் 7 ன் டைட்டில் வின்னர்” என்பதனை தீர்மானிக்க போகின்றது.
அத்துடன் இறுதி வாரத்திற்கான முதல் டாஸ்க்காக “மற்ற போட்டியாளர்களை விட நான் எந்த விடயத்தில் சிறந்தவர்..” என வாதிடும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் போட்டியாளர்களும் தங்கள் பக்கம் இருக்கும் நியாயங்களையும், மற்ற போட்டியாளர்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள் என்றும் வாதிட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதன்படி, மணி, தினேஷ் இருவரின் வாதம் அர்ச்சனாவிற்கு எதிராக திரும்பியுள்ளது. இதனால் அர்ச்சனா கண்கலங்கியப்படி அமர்ந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து மாயா - விஷ்ணுவையும் மற்றும் விஜய்- தினேஷ்யும் ஒப்பிட்டு வாதிட்டு கொள்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கின்றது. ப்ரோமோ பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், “ மறுபடியும் ஆரம்பதித்து விட்டாரா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |